மதுரை,

‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறமொழி பிரிவு மாநில செயலாளர் கன்பத்லால் தலைமை தாங்கினார்.

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் வரவேற்று பேசினார்.

பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை அறிமுகப்படுத்தி பேசினார்.நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் சிறப்புரையாற்றினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மண்டல் தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *