காரைக்கால் அருகில் கோடை வெயிலின் தாக்கத்தால் பற்றி எரிந்த புளியமரம் ஒரு மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு துறையினர் :

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் திருமலை ராஜன் ஆற்று பாலம் பகுதியில் பிராதன சாலை ஓரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு மரங்கள் நடபட்டு உள்ளன. காரைக்கால் மாவட்டம் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் அங்கிருந்த புளிய மரத்தில் நேற்று மாலை முதல் புகை வந்தது.

இதனை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாத நிலையி ல்காலை திடீரென புகை மூட்டத்துடன் புளிய மரம் தீபற்றி எறிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர். மரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக திருமலை ராஜன் ஆற்று பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் அனுப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *