காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கனிமொழி பிரேம் தலைமை வகித்து மாணவர்கள் சாலையை கவனமாக பயன்படுத்த அறிவுரை கூறினார்.

சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை சார்பில் தேசிய விருது பெற்ற புதுமை பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு, பாத சாரிகள் கோடு , தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி செய் முறையுடன் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை திருமதி பிரேமா செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் இந்துமதி, பிரியா, ஜமுனா ராணி, சித்ரா, காயத்ரி,
ஸ்ரீ விஜயசேகரி, கௌரி, பூங்கொடி, சந்தியா, சரஸ்வதி, வளர்மதி, கவிதா மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *