தருமபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும் பணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கலையரசன்,பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக நகர செயலாளர் தென்னரசு,ஒன்றிய கழகச் செயலாளர் விஸ்வநாதன் மற்றும் சேகர்,மாவட்ட கழக துணை செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மணி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பெரிய கண்ணு,உள்ளிட்ட அனைத்து அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.