நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது

தமிழக முழுவதும் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிமுக கூட்டணி கட்சியின் எஸ் டி பி ஐ வேட்பாளராக முகமது முபாரக் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த திலகபாமா மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கயிலை நாதன் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் வாக்குப்பதிவு திண்டுக்கல் பாராளுமன்ற ஆறு தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்த நிலையில்

வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகளான EVM மெஷின் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் தலைமையில் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டது

கொண்டுவரப்பட்ட ஏவிஎம் மிஷின்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த முகவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பூங்கொடி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு பெட்டிகள் அனைத்தும் அறைகளில் வைக்கப்பட்டு நுழைவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது

மேலும் அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது அதேபோல் அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது அதேபோல் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது

காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து வாக்கு பெட்டிகளையும் அதே போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றியுள்ள பகுதிகளையும் கண்காணிப்பதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அதேபோல் அரசியல் கட்சியினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிடுவதற்காக சிசிடிவி காட்சிகளை பார்வையிடுவதற்கு தனி அறை அமைக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அவர்கள் டிவி திரையில் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தற்போது துப்பாக்கியிருந்த காவல்துறையினர் அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *