குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவையின் இந்த ஆண்டின் நிறைவு பேரவை கூட்டம் மற்றும்புதிய ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்தும், புதிய நாள்காட்டி மற்றும் கையேடுவழங்கும் சிறப்பு நிகழ்ச்சியானது நமது பேரவை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரவையின் மதிப்பியல் தலைவர் சக்கரவர்த்திதலைமையேற்று 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி விழாவினை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செயல் தலைவர் முனைவர் பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் ஞானமணி, நிர்வாகிகள் ருஷோத்தமன், கணேசன் கனகசபை ஆகியோர், முன்னிலை வகித்தனர். பேரவையின் காப்பாளர் மற்றும் ஆலோசகர்முனைவர் மேனாள் மாவட்ட நீதிபதி உச்ச நீதிமன்ற பதிவாளர் நீதிபதி அருள் கலந்து கொண்டு “தேசிய நுகர்வோர் தினவிழா ” சிறப்புகள் குறித்தும் வரும் ஆண்டிற்கான பேரவையின் முக்கிய செயல்கள் குறித்து தமது கருத்துக்களை, பகிர்ந்தார்கள் மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான மாதாந்திர மற்றும் நாட்குறிப்பேடு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. .
நிகழ்ச்சியில் பேரவையின் பொறுப்பாளர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கனகசபை, ராஜசேகரன், தி புருஷோத்தமன், ஆரிய இளங்கோவன்,பொறியாளர் ராஜன்பாபு , ரயில்வே ரவி, ராமலிங்கம்,சுரேஷ், மகளிர் உறுப்பினர்கள் வினோதினி புவனேஸ்வரி,பொன்னரசி மற்றும் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக பேரவையின் தலைவர் கோவி. கல்விராயர்
நன்றி கூறினார்.