தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும், புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை படுத்தல் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தல்
வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜனவரி 6 ம் தேதி முதல் நடை பெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் – அரசுப்பணியாளர் கள் அனைவரையும் முழுமையாக பங்கேற்கும் விதமாக மதுரை பைபாஸ் ரோட்டில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் சந்திரபோஸ் பா.பாண்டி நவநீதகிருஷ்ணன்
பொற்செல்வன் பீட்டர் ஆரோக்கியராஜ் இரா.தமிழ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நீதி ராஜா மாநாட்டை துவக்கி தொடக்க உரையாற்றினார்.
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல பொறுப்பாளர் கிறிஸ்டல் ஜீவா ஆகியோர் மாநாடு உரை ஆற்றினார்.
மாநில ஒருங்கிணைப் பாளர் ச.மயில் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அனைத்து ஆசிரியர் சங்கத்தின் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்கள் பெருந்திரளாக கருப்பு பட்டை அணிந்து வரும் ஜனவரி 6 ம் தேதி முதல் நடைபெற உள்ள கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கு பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, பொற் செல்வன், நவநீத கிருஷ்ணன், பீட்டர் ஆரோக்யராஜ், இரா.தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.