கோவை
திருப்பரங்குன்றம் விவகாரம்-பொதுமக்கள் எதிர்ப்பால் தான் அசைவ உணவு தடுக்கப்பட்டது – காவல்துறை தடுத்ததாக நாடகம்,கோவையில் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு..
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து வியாபாரிகள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வியாபாரிகளிடையே ஒற்றுமை, விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நாட்டின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த சங்கம் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வியாபார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 4 ஆம் தேதி கோவையில் வியாபாரிகள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அறிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், தி.மு.க அரசு இந்துக்கள் விரோதமாகவும், கடவுள் நம்பிக்கை அற்ற அரசாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.திருப்பரங்குன்றம் முருகன் மலை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும், மத்திய காவல் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட போதும் அரசு அதை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
சந்தனக்கூடு மற்றும் கொடிக் கம்பம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், 144 தடை உத்தரவு காரணமாக பக்தர்களுக்கு மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்.சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின் போது பூரண சந்திரன் உயிர் தியாகம் செய்ததாக கூறிய அவர், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், திருப்பரங்குன்றத்திற்கு மாமிசம் மற்றும் பிரியாணி கொண்டு செல்ல முயன்றதை அங்கு இருந்த பொதுமக்கள் எதிர்த்ததால்தான் தடுத்து நிறுத்தப்பட்டது, ஆனால் இதனை காவல்துறை தடுத்ததாகக் காட்டி தி.மு.க நாடகம் ஆடுவதாகவும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சிக்கந்தர் தர்கா என கூறப்படும் இடத்தில் கோவில் தூண் இருப்பதாகவும், அந்த கல்லில் ஹனுமான் படம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், தீபம் ஏற்றுவதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
உடன் மாநில பொது செயலாளர் J.s.கிஷோர் குமார் மாநில நிர்வாக குழு, உறுப்பினர் S.சதிஷ் கோட்ட பொது செயலாளர் பாபாஆ.கிருஷ்ணன் மாவட்ட தலைவர் K.தசரதன்
கோட்ட செயலாளர் உருவை K.பாலன் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால்
வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் கோபால் மாவட்டச் செயலாளர் உக்கடம் ஆனந்த் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கள் K. ஆறுச்சாமி K.மகேஷ்வரன் மாவட்ட துணைத்தலைவர் M.R.முரளி ஆகியோர் உடல் இருந்தனர்