மணலிபுதுநகரில் அற்புதக் குழந்தை இயேசு கோவில் 46 ம் ஆண்டு 10 நாட்கள் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு குழந்தை இயேசு உருவம் பொறித்த இந்த கொடி ஏற்றப்பட்டது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..
விழாவில் திருக்கொடிக்கு கும்பமரியாதை செய்து வரவேற்ற பெண்கள்..
குழந்தை வரம் வேண்டி அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்யும் இந்த பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருத்தளத்தில் முன்னதாக, குழந்தை இயேசு கோவிலில் ஆலயம் பங்கு தந்தை தங்க குமார், தலைமையில் ஜெபமாலை திருப்பலியுடன் துவங்கிய இந்த நிகழ்வின் திருக்கொடிக்கு ஜெபிக்கப்பட்டு, சாம்பிராணி துாபமிட்டு, ‘மரியே வாழ்க’ முழக்கங்களுடன், திருக்கொடியேற்றம் நடைபெற்றது இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பத்து நாட்கள் நடைபெறும் பெருவிழாவில், முதல் வியாழக்கிழமை யான ஜனவரி 1ஆம் தேதி, அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு நாள் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை திருத்தளத்தில் திருப்பலி, நற்கருணை ஜெபம் நடைபெறும் . இந்த விழாவில் வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து குழந்தை இயேசுவை தரிசிப்பர்
முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜனவரி 3 ம் தேதி அறுபணி போஸ்கோ அருட்பணி சார்லஸ் குமார் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து, ஜனவரி 4 ம் தேதி ‘இருளகற்றும் ஒளியாக அற்புத குழந்தை இயேசு’ என்ற தலைப்பில் ஆசீர்வாத திருவிழா நடைபெற உள்ளது.
இந்த, ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை, திருத்தல பங்கு தந்தை தங்க குமார் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய நிகழ்வான கொடியேற்ற பெருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்,
முன்னதாக கொடி ஏற்றிய பங்கு தந்தைகளுக்கு பெண்கள் கும்ப மரியாதை செய்து வரவேற்று கிறிஸ்துவ பாடல்களைப் பாடி பெருவிழாவை வரவேற்றனர்