தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் 1000 பேர் திமுகவில் இணையும் விழா

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டி பட்டியில் உள்ள சந்திர பாண்டியன் திருமண மஹாலில் நடைபெற்ற விழாவில் பழனி செட்டி பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ.மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மாற்றுக் கட்சியினர் 1000 பேர் தேனி மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி முன்னிலையில் பவள விழா காணும் மாபெரும் மக்கள் இயக்கமான திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

. இந்த விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் ஜெயக்குமார் தேனி வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.சக்கரவர்த்தி பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய,பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.பேரூர் திமுக அவைத் தலைவர் ஜோதிராம் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *