திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்
ஒன்றிய அரசு வீட்டு உபயோகம் வணிக உபயோகம் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்வை கண்டித்தும் மேலும் சமையல் கேஸ் சிலிண்டரின் தட்டுப்பாட்டை வலியுறுத்தியும் ஒன்றிய அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கேஸ் விலை உயர்வை திரும்பபெற கோரி மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் நகருக்கு உட்பட்ட தலைமை தபால் நிலைய அலுவலக முகப்பு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பு எரித்து ஒப்பாரி வைத்து ஒன்றியஅரசின் மக்கள் விரோத கேஸ் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஒன்றிய அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் ஆர்ப்பாட்ட நிகழ்வில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தாஹிர் இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ராஜா இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அஜித்குமார் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் விவசாயபிரிவு மாநில பொதுச்செயலாளர் மடப்புரம் எம். சம்பத்மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி திருவாரூர் நகர தலைவர் தலைவர் அருள் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் ஆனந்த் செல்லையா உள்பட மாநில மாவட்ட நகர வட்டார தலைவர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *