C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் டெல்டா தூர்வாரும் திட்டத்தின் கீழ் மணலூர் பகுதியில் வண்டிகேட் அருகே உள்ள சிவகாமசுந்தரி ஓடை ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி கடை கோடி விவசாயிகளுக்கும் தேவையான நீர் பாசனத்தினை பெற்றிடும் வகையில், நீர் பாசன வசதியினை மேம்படுத்திடும் வகையிலும் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் பெருமக்கள் மேன்மையடையவும், உரிய நேரத்தில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிட செய்யும் நோக்கத்துடன், 2026-2027 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.18.00 கோடி மதிப்பீட்டில் 102 பணிகளுக்கு 585.41 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்படவுள்ளது. குறிப்பாக இக்கோட்டத்திற்கு ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் 90 பணிகளுக்கு 531.10 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக சிதம்பரம் நகர எல்லையில் சிவகாமசுந்தரி ஓடையில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் 5.00 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணி இன்றைய தினம் துவங்கிவைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவிசெயற்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.