தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்., அரசு ஊழியர்களின் போராட்டத்தின் விளைவாக தமிழக முதல்வர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். வரவேற்கிறோம், பாராட்டுகள். 23 ஆண்டுகளாக நடைபெற்ற பிரச்சனை இந்த ஓய்வுதியம்.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.. எடப்பாடி ஆட்சியில் அடக்குமுறைகளை ஏவி பல வழக்குகளை போட்டு நடவடிக்கை எடுத்தனர்.. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி அளித்த நிலையில், பல போராட்டங்களின் விளைவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அங்கான்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் சாலை பணியாளர்களுக்குண்டான அறிவிப்பு ஒன்றும் இல்லை.. சாலை பணியாளர்களுக்கு 41 மாதம் காலம் ஜெயலலிதா ஆட்சியில் நீக்கப்பட்ட பின்பு திமுக ஆட்சியில் இணைக்கப்பட்டது. அவருக்கு உண்டான நிதி அறிவிப்பு ஒன்றும் இல்லை. ஊதிய முரண்பாடு களைய வேண்டும். இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படும்.

மத்திய அரசு நியாயமான நிதியை ஜிஎஸ்டி உட்பட தமிழகத்திற்கு வழங்கவில்லை. மேலும், தமிழக அரசும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உண்டான ஓய்வூதியத்தை அதிகரிக்க முன் வர வேண்டும். மேலும் இந்த அறிவிப்பானது திமுக வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக, பிஜேபி கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் அழைத்தும் யாரும் போகவில்லை..

மேலும், தமிழக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற முடியாதது தான். ஆனால் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது மகிழ்ச்சி. ஒன்பது லட்சம் கடன் திமுக வாங்கியது இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 5 லட்சம்.. திமுக ஆட்சியில் நான்கரை லட்சம் தான் கடன் வாங்கி இருக்கிறார்கள்.. கேரளா மாநிலம் கூட கடன் வாங்கி இருக்கிறது.. அனைத்து மாநில அரசர்களும் கடன் வாங்குவது இயல்புதான். திமுக மட்டும்தான் கடன் வாங்கியது போன்று கூறுவது பொருத்தமாக இருக்காது..

இந்தியாவில் தமிழகம் வளர்ச்சி மாநிலம் என்று மத்திய அரசு கூறியிருப்பது உண்மைதான் மறுப்பதற்கு இல்லை என்றார்..

பேட்டி : சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *