பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                                                                 பெரம்பலூர்.ஜன.04. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 2026 இன் ஒரு பகுதியான வாக்காளர் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்து

19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி அடையும் புதிய வாக்காளர்களையும் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இறப்பு மற்றும் நிரந்தரமான இடப்பெயற்சி காரணமாக நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் விவரங்களான பெயர், உறவினர் பெயர், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றினை திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமோ (BLO) அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்திலோ வாக்காளர்கள் மனு தாக்கல் செய்துகொள்ளலாம். வாக்காளர்கள் இச்சிறப்பு முகாம்களில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களின் உதவியுடன் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பயனடையலாம்.

வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது “வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி” (Voter Helpline Mobile App) என்ற கைபேசி செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *