மதுரை,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்என்று ஏ.டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேடு கிராமத்திலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெற உள்ளது. அந்த இடங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் போலீஸ் இயக்குனர் பல்வேறு அறிவுரை வழங்கினார்.
அதில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக காளைகள், காளைகளின் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக சுற்றுப்புறமுள்ள கிராமங்களிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படாதவாறு முறையான பாது காப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தலா 2 ஆயிரம் போலீசார் வீதம் பாதுகாப்பு பணிகளில் அமர்த்த வேண்டும். மாடுபிடி வீரர்கள் மற் றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதணை செய் யும் இடங்களிலும், காளை கள் அவிழ்த்துவிடும் வாடிவா சல்,பொதுமக்கள், பத்திரிகை யாளர்கள் அமரும் இடங்கள், முடி வில் அழைத்து செல்லும் இடங் களில் சிறந்த முறையில் பாது காப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எவ்வித அசம்பா காளைகளை விதமின்றியும், சிரமமின்றியும் ஜல்லிக்கட்டு இனிதே நடை பெறுவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *