குச்சனூர் பேரூராட்சியில் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடக்கம் தேனி மாவட்டம் குச்சனூர் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

குச்சனூர் பேரூராட்சியில் 2025 2026 நிதி நிலை அறிக்கையின் படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்த நிகழ்வினை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவின் பேரில் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 374 இல் 60 சென்ட் இடத்தினை அளவீடு செய்யும் பணியில் உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது தலைமையில் வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், குச்சனூர் கிராம நிர்வாக அலுவலர் உத்தமபாளையம் நில அளவையாளர், குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி ரவிச்சந்திரன் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் இளநிலை உதவியாளர் இளவரசு மற்றும் குச்சனூர் பேரூராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் அளவீடு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *