தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம் அரங்க நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். பொறுப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் படிப்பகத்தின் கூடுதல் பொறுப்பாளர் இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார்.

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திபிரபாகர், வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளர் மணிமாறன், மகளிர் ஆயம் சொரபினா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பிஸ்மி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் மைதீன் கனி, எழுத்தாளர் மு.மு. தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினாா்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிர்நிலவன் சிறப்புரையாற்றினார்.

போராட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *