தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெல்லும் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி போடி கிழக்கு ஒன்றியம் பூதிப்புரம் பேரூர் திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன

தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்க்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் எம்பி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்

அவர் பேசும் போது தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஆண்டிப்பட்டி போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொடர அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஜயப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளரும் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவருமான கவியரசு பால்பாண்டியன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக இளைஞரணி திமுக அமைப்பாளர்களும், துணை அமைப்பாளர்களும் தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான். பூதிப்புரம் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ விக்னேஸ்வரன் துணை அமைப்பாளர். தவமுருகன் மற்றும் மணிகண்டன் உட்பட பூதிப்பரம் பேரூர் திமுக நிர்வாகிகளும் இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *