செங்கல்பட்டு மாவட்டம் தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகம் திரைப்படம் 100 நாள் வெற்றி விழா காண அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.

தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் 100 நாள் வெற்றி விழா காண தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி
செங்கல்பட்டு மாவட்டம் புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்று
பக்தர்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் எம்.எஸ்.பாலாஜி, சபரி,சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் இதில் ஒன்றிய நிர்வாகிகள் தரணிதரன், ஜானகிராமன், செந்தில், இளங்கோவன், மற்றும் நகர நிர்வாகிகள் கராத்தே கரண், ஏழுமலை,ஜெகன், சக்திவேல்,உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அச்சிறுப்பாக்கம் ஒன்றிய நகர நிர்வாகிகள்
சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *