உப்பளம் தொகுதி ரோடியர்பேட்டில் உள்ள அங்குநாயகர் தோப்பு பகுதியில் ப-வடிவ கழிவுநீர் வாய்க்கால்களை அனிபால் கென்னடி எம்எல்ஏ: சீர் செய்து கொடுத்தார்

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ரோடியர்பேட்டில் உள்ள அங்குநாயகர் தோப்பு பகுதியில் ப-வடிவ வாய்க்கால் சிதைந்து கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லாமல் மண் சரிந்து வீட்டு வாசல்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருந்தது,
இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடியிடம் அலைபேசியில் பொதுமக்கள் தெரிவித்தனர், உடனே நகராட்சி டாக்டர் துளசிராமன் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் , உதவிப்பொறியாளர் பிரபாகரன் , இளநிலைப்பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் சட்டமன்ற உறுப்பினர் இது சம்பந்தமாக அலைபேசியில் தெரிவித்தார்.
எம்எல்ஏயின் கோரிக்கையை ஏற்று சம்பவ இடத்திற்கு ஜேசிபியுடன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சுத்தகரிப்பு பணியினை மேற்கொண்டனர். அடைப்புகளை நீக்கி கழிவு நீர் சீராக செல்லும்படி பணிகளை முடித்தனர், மேலும் முறையாக ப-வடிவ வாய்க்கால் கட்டுமான பணியினை கூடுதலாக கட்டி கொடுக்கும் படி சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடி கோரிக்கை வைத்தார், அதனை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இப்பணிகளை நேரடியாக இருந்து எம்எல்ஏ கவனித்தார். அவைத்தலைவர் ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞர் அணி ராஜி, கிளை செயலாளர்கள் மாயவன், முரளி, ராகேஷ்கெளதமன், லாரன்ஸ், கழக சகோதரர்கள் ஆறுமுகம், குழந்தை இயேசு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பகுதியில் முழுமையாக கொசு மருந்து அடிக்கவும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *