தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே இளம்பெண் மர்ம மரணம்… காதல் திருமணத்தில் முடிந்த சோக அத்தியாயம்…!
மது பழக்கம், குடும்ப சண்டை… மொண்டிக்காட்டு தோட்டத்தில் பெண் பிணம்… குண்டடத்தில் பரபரப்பு…!
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் கிராமம்,மொண்டிக்காட்டு தோட்டம் என்ற பகுதியில்,
பூங்கொடி என்ற இளம்பெண் பிணமாக கிடப்பதாக,குண்டடம் காவல் நிலைய போலீசாருக்கு,தற்போது தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில்,தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்,
நேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில்,கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து (35),
இவரது மனைவி பூங்கொடி,(26)இவர்களுக்கு பெமினேஷன் (7),நிதன்யா (3) என,
இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியவந்தது பூங்கொடியின் தந்தை கணேசன் (57),தாய் வசந்தி (44),ஒரே மகளான பூங்கொடி,
16 வயதில் அங்கமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும்,
திருமணத்திற்கு பின்,சில ஆண்டுகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும்,
போலீசார் தெரிவித்தனர்.
ஆனால்,கடந்த சில மாதங்களாக,கணவன் – மனைவி இடையே,தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும்,சமையல் வேலை செய்து வரும் அங்கமுத்து,
அடிக்கடி மது அருந்திவிட்டு,மனைவி பூங்கொடியை தாக்கி துன்புறுத்தி வந்ததாகவும்,
உறவினர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில்,இன்றுமொண்டிக்காட்டு தோட்டம் பகுதியில், கை கால் முகம் போன்றவை வெட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்து பூங்கொடி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில்,
காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன்,
திருப்பூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மரணம்,
தற்கொலையா…?
அல்லது கொலையா…?
என்ற கோணத்தில்,
குண்டடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் காரணமாக,குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.