குமுளி அருகே கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள லோயர் கேம்ப் மணி மண்டபத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் 185 ஆவது பிறந்த தினத்தையொட்டி வியாழக்கிழமை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் மணி மண்டபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசும்போது தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசு விவசாயத்திற்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது பொங்கல் பண்டிகையினை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ரூபாய் 3000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி உள்ளார்கள் பிறந்தநாள் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் 185 பிறந்த தினம் இன்று அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்படுகிறது
தென் மாவட்ட நீர்வளத்திற்கு அடையாளமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களை நினைவு கூறும் விதமாக அன்னாரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது நூற்றாண்டுகள் மக்கள் மனதில் ஒருவர் இடம்பெற்று இன்றளவும் கொண்டாடப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழக அரசின் சார்பில் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் சொந்த ஊரான இலண்டனில் கேம்பரளி நகர மையப் பூங்காவில் அமைக்கப்பட்ட அன்னாரின் திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்வில் எம்பியான நானும் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
தமிழ்நாடு வரலாற்றில் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழ்நாடு செழிப்பதற்கு காரணமாக உள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்ல கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் பள்ளி மாணவ மாணவியர்கள் கிராமிய கலைக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்