பிரபல பின்னணி பாடகி ஜொனிதா வருகிற பிப்ரவரி 26ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காந்தி பிரமாண்ட இசை கச்சேரி கோவையில் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜோனிதா காந்தி, குறைந்தது 10 மேற்பட்ட மொழிகளில் (தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,

மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி) பாடியிருக்கிறார்.

காதல் கண்மணி திரைப்படத்தில் இருந்து மென்டல் மனதில், பீஸ்ட் திரைப்படத்தில் அரபுகுத்து, டான் திரைப்படத்தில்பிரைவேட் பார்ட்டி, வாரிசு திரைப்படத்தில் இருந்து ஜிமிக்கி பொண்ணு மற்றும் பிற மொழிகளில் பல பாடல்களுக்குப் பின்னால் குரல் கொடுத்தவர். ஜோனிடாவின் கவர் பாடல்கள் யூடியூபில் மிகவும் பிரபலம், மேலும் அவரது கவர் பதிப்புகளையும் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.

அருண் ஈவென்ட்ஸ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றன. மாலை 5 மணியளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 2.5 மணி நேரம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு 25,000+ ரசிகர்களை கொடிசியா மைதானத்தில் கவரவுள்ளது. நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர்கள் இந்த நிகழ்வை சர்வதேச இசை கச்சேரிகளுக்கு இணையாக நடத்திட வேண்டுமென முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து அருண் ஈவென்ட்ஸ் அருண் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்

கூறுகையில், இந்த கச்சேரியில் ஜோனிதாவின் தமிழ் ஹிட்ஸ் ஒரு பெரிய வரிசை

இருக்கும், பாடகி பாலிவுட் நிறைய ஹிட்களை வழங்கியுள்ளார். தெலுங்கு மற்றும்

ஆங்கிலம் மொழிகளிலும் பாடல்களை எதிர்பாக்கலாம்.

டிக்கெட்டுகள் Sporty. PAYTM INSIDER, BOOK MY SHOW கிடைக்கும். மேலும் நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் கவுண்டர்கள் இடம்பெறும், அங்கு பெற்றுக்கொள்ளலாம். ரூ.500 முதல் ஆரம்பமாகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *