நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை வட்டார மண்டல போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபா கரன், சாலை பாதுகாப்பு குழு தலைவர் நைனா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்துக்கு அதிகாரி சந்திரசேகர் பேசியதாவது:-
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து இடங்களை கண்டறிவது, மற்றொன்று நம்மை காக்கும் 48.

இந்த திட்டத்தின் கீழ் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ மனையில் சேர்த்தால் அந்த செலவை அரசே ஏற்கிறது. விபத்துக்குள்ளானவர் களை உடனே மருத்துவ மனைக்கு கொண்டுசென்று காப்பாற்றுபவர்களுக்கு நற்கருணை வீரர் விருது தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும், சாலை விதிகளை மதிக்காதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நிலை கூட ஏற்படும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலை விதிகளை மதித்து கவனத்துடன் செல் வதன் மூலம் பாது காப்பான பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.
உங்களை நம்பி பெற் றோர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், மாணர்கள் தங்களது வாழ்க்கையில் லட்சியங்களை அடைய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். வாகனங்களில் செல்லும்போது சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து, சாலை பாதுகாப்பு குழு தலைவர் நைனா முகமது, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும், ஓட்டுநர் உரிமம் குறித்த அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, சாலை விதிகளை மதிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் இயக்குநர் ஜான் கென்னடி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரதர்ஷினி அருண்பாபு, பொது மேலாளர்கள் ஜெயக் குமார், கிருஷ்ணகுமார், இயக்குநர்கள் முகமது சாதிக், ஜான் கென்னடி, பேராசிரியர் ஸ்டீபன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகாரிய கேப்ரியல் வழிகாட்டுதலின் பேரில் நாட்டு நலத்திட்ட பணி இயக்குநர் சுமன் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *