வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் 21.ம் 22.ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் கீழ் நடந்த வேலை மற்றும் செலவினங்கள் குறித்து சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் கருப்பட்டி சமுதாய கூடத்தில் நடந்தது இக்கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அம்பிகா தலைமையில் தணிக்கை அலுவலர் கோபால கிருஷ்னன் .பற்றாளர் கமலாநேரு செயலர் முனியாண்டி துணை தலைவர் ரேவதி ஆகியோர் முன்னிலையில் 2020/21.மற்றும் 2021/22 ம் ஆண்டிற்கான வேலை உறுதி திட்டம் குறித்த கள பயிற்றுனர்கள் அறிக்கை வாசித்தனர்.
இதுபோல் இரும்பாடி கிராமத்தில் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி பண்ணைசெல்வம் தலைமையில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தணிக்கை அலுலவர் கோபால கிருஷ்ணன் துணை தலைவர் பிரியா. செயலர் காசி.பற்றாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கள பயிற்றுனர்கள் 21.ம் 22.ம் ஆண்டிற்கான வேலை உறுதி திட்டம் குறித்த அறிக்கை வாசித்தனர். காடுபட்டி கிராம நூலகத்தில். நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி .ஆனந்தன் தலைமை தாங்கினார் .தணிக்கை அலுவலர் பாலமுருகன் பற்றாளர் கருப்பையா. செயலர் ஒய்யணன் ஆகியோர் முன்னிலையில் 21.ம் 22.ம் ஆண்டிற்கான. தேசிய வேலை உறுதி திட்டம் குறித்த. கள பயிற்றுனர்கள் அறிக்கை வாசித்தனர்.அதில் பணிசெய்யும் இடத்தில் முறையான தகவல் பலகை இல்லை. பணியிடத்தில் அளவீடு மாறுதல். பயனாளிகள் வருகை பதிவேட்டில் கையெழத்து கைரேகை மாறுபாடு .சாலையோர மரகன்று பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள். அந்தந்த ஊராட்சி தணிக்கையின் போது தெரியவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *