2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வாழ்தியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *