தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான, தமிழக முதல்வர் 2021 தேர்தல் கால வாக்குறுதியான வரிசை எண் 313 ல் அறிவித்தபடி சத்துண ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக அமைப்பாளருக்கு 5 லட்சமும் சமையல் உதவியாளருக்கு 3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளாகும்.
அதன்படி, தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்பு தூத்துக்குடியில் உள்ள 12 ஒன்றியத்தில் இருந்து கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்பில் இருந்து அருகே உள்ள அம்பேத்கர் சிலை ஊர்வலமாக நடந்து சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை குண்டுகட்டாக தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர் சத்துணவு ஊழியர்களின் போராட்டதால் பள்ளிகளில் குழந்தைகளின் உணவு கேள்வி கூறி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி: ஜெயபாக்கியம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்..