எண்ணூர் காவல்துறை உதவி ஆணையர் வீரக்குமார் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உதவி ஆய்வாளர் வீரக்குமார் ஆகியோர் எண்ணூர் வ உ சி நகரை சேர்த்த ஆட்டோ ஓட்டுநரின் வினோத் குமாரின் நேர்மையை பாராட்டி ஒப்படைத்த நகையை உரியவரிடம் கொடுத்த சம்பவம் எண்ணூரில் அரங்கேறியது
எண்ணூர் தாழங்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேச ராணி இவர் நேற்று மதியம் துளசி ஜுவல்லரி கடையில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான செயின் மற்றும் கம்பலை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் தனது வீட்டிற்கு சென்று உள்ளார் வீட்டில் சென்று தேடிப் பார்த்த போது நகை தவறவிட்ட நிலையில்
எண்ணூர் காவல் நிலையத்திற்கு வந்து நகையை காணவில்லை என புகார் கொடுத்த நிலையில் இது உங்கள் நகையா என போலீசார் கேட்டபோது நகையைப் பார்த்து இது எங்கள் நகை தான் எனக் கூறியதை யடுத்து அதை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை அழைத்து உரியவரிடம் ஒப்படைத்தனர் எண்ணூர் போலீசார் ஆட்டோ ஓட்டுனர் வினோத் குமாரை நேர்மையை பாராட்டினர்