தேசிய அளவிலான குவாண்கிடோ போட்டியில் 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்று தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்-ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கு கோவை மாணவி தேர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்வாத்தி நகரில் ஏழாவது தேசிய அளவிலான குவான்கிடோ போட்டி கடந்த 16 மற்றும் 17 ந்தேதி நடைபெற்றது,இந்தியாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கோவை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்…

இதில் ஃபைட்டிங்,குவான்,வெப்பன்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் கோவையை சேர்ந்த ஒரு மாணவி உட்பட மூன்று பேர் 3 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலம் என எட்டு பதக்கங்களை வென்று அசத்தினர்..

இந்நிலையில் வெற்றி பதக்கங்களுடன் கோவை திரும்பிய தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் சதீஷ் மற்றும் மாணவர்களுக்கு குவாண்கிடோ கோவை மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கோவை விமான நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்…

தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி,ஐரோப்பா ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *