எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
ப்ளஸ் டூ தேர்வில் சீர்காழி பள்ளி சாதனை.
மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழி நகரில் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழி பகுதியில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி எனும் செல்வத்தை வழங்கி வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளி ஆனது இன்று வெளியான பிளஸ் டூ தேர்வின் முடிவில் முடிவுகளில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் இக்கல்வி ஆண்டில் மேல்நிலைப் பிரிவு இரண்டாம் ஆண்டு பயின்ற 239 மாணவ,மாணவிகளில் 237 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று 99.2% தேர்ச்சி பெற்றனர்.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.2% அதிக தேர்ச்சி விழுக்காட்டினை பெற்று சிறப்பிடம் பள்ளி பெற்றது. தேர்வு முடிவின்படி lமுதலிடத்தினை பி. ராகினி 12 ஆம் வகுப்பு ஏ பிரிவை சார்ந்த உயிரியல் ஆங்கில வழி பயின்ற மாணவி 541 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றார்.அவரைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு சி பிரிவை சார்ந்த வணிக கணிதம் பாடப்பிரிவில் பயின்ற மாணவர் ஏ.அன்பரசன் 535 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மேலும் 12 ஆம் வகுப்பு ஏ பிரிவை சார்ந்த எம்.நற்பவி 534 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
இப்பெருமையை பெற்ற பள்ளி மாணவ மாணவிகளையும் பயிற்றுவித்த மேல்நிலை பிரிவு பாட ஆசிரியர்களையும் பள்ளி செயலர் வி. சொக்கலிங்கம், பள்ளி குழு தலைவர் ஆர். சிதம்பரநாதன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம். கபாலி,பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன், உதவி தலைமை ஆசிரியர் என். துளசிரங்கன் பள்ளி மூத்த முதுகலை ஆசிரியர் வி.முருகபாண்டியன் மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டினார்கள்.