வடலூர், மே.9-
வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நிவேதா 4 பாடங்களில் 100 க்கு,100 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

செல்வன். வசந்த்பரணி 2 பாடங்களில் 100 க்கு100 உடன், 593 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், செல்வி.அஃப்ரா 2 பாடங்களில் 100 க்கு100 உடன், 589 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். பாடவாரியாக 31 நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய 296 மாணவர்களில் 35 பேர் 550க்கு மேலும், 175 மாணவர்கள் 500க்கு மேலும்,மொத்தமாக அனைத்து மாணவர்களுமே 400 க்கு மேல் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் முதல் மூன்று மாணவர்களுக்கு , பள்ளியின் முதல்வர் திருமதி.சுகிர்தா தாமஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.தீபக் தாமஸ் ஆகியோர் பொன்னாடைப் போர்த்தியும், கேடயம் வழங்கியும் பாராட்டினர்.

மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினர். இம்மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *