தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உறுவெடுத்துள்ளது. 108 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்று மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. இப்படியான நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரும் த.வெ.க.வை தமிழ்நாடு ஆளுநர் அழைத்து பதவிப்பிரமானம் செய்து வைக்க வேண்டும். அதை விடுத்து ஆளுநர் தாமதப்படுத்தும் நகர்வானது வாக்களித்த மக்களுக்கு எதிராக உள்ளது .
எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாட்சி அமைய, மக்களால் தேர்வான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உரிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பாக வலியுறுத்துகிறது.
நல்லிணக்க பணியில்…
ஹாஜி. ஜெ. முகமது ராபி,
தலைவர் – பல்சமய நல்லுறவு இயக்கம்.