கரூர் செய்தியாளர் மரியான் பாபு


மல்யுத்த அணிக்காக மாணவர்கள் தேர்வு ..

மாநில அளவிலான மல்யுத்த போட்டி 13/01/26 அன்று ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் இந்திய பள்ளி குழுமம் சார்பில் (SGFI) school games federation of India சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாநிலத் தெரிவு போட்டி நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் அமைந்துள்ள அரங்கசாமிக் கவுண்டர் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஏழாம் வகுப்புமாணவன் குகன், எட்டாம் வகுப்பு மாணவன் கமலேஷ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி சஞ்சனா ஆகிய மூவரும் தமிழக மல்யுத்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்திய பள்ளிக் குழுவும் சார்பில் வருகின்ற 30/01/26 முதல் 03/02/26 வரை இந்திய பள்ளி குழுமம் நடத்தும் மல்யுத்த போட்டி தேசிய அளவில் டெல்லியில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் மாணவர்கள் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *