தேனியில் மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கம்பம் கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழக முதல்வர் சமத்துவ பொங்கல் விழாவில் பெண்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
இந்த போட்டிகளில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் வணிக மேலாண்மையியல் மாணவிகள் பங்கேற்று முதல் இடத்தை பிடித்து ரூபாய் 50.000 பரிசுத் தொகை மற்றும் வெற்றி கோப்பையை வென்றது மட்டுமில்லாமல் மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு தேர்வாகினார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் எம்பி அவர்கள் பரிசு மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் தேனி நகரச் செயலாளர்கள் சூர்யா பாலமுருகன் எம்.சி. நாரயணப் பாண்டியன் தேனி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஜயப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர் இதற்கான வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர்.வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரேணுகா கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சுசீலா உடற்கல்வி ஆசிரியை ஆர்.சூர்யபிரபா பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கல்லூரி அலுவலர்கள் வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்தி பேசினார்கள். கல்லூரி திருவள்ளுவர் மின்னியல் நூலகர் என்.ராஜலட்சுமி நன்றி கூறினார்.