தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வல்லம் முஸ்லிம் ஜமாத்துக்கு பாத்தியப்பட்ட காட்டு பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு பச்சை களை ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க நிறைபிறை கோடியானது வல்லம் பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கி பிரதான பாதைகளில் வலம் வந்து சிறிய பள்ளிவாசலான சேகுவர்ஷா தர்காவில் கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஊர்வலமாக காட்டு பள்ளிவாசலில் அமைந்துள்ள உயர்ந்த மரமான தல விருட்சத்தில் பச்சைகளை கொடி ஏற்றப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் சகோதர மதத்தினர் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வல்ல ம் ஜமாத் தலைவர் அகமது மீரான் செயலாளர் ஷேக் தாவுதுதென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் . திவான் ஒலி முகமது ஜலால் திவான் மைதீன் பிச்சை காசாலி பொருளாளர் செயலாளர் பீர்முகம்மது உறுப்பினர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் விழா கமிட்டி குழுவினர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *