தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊர் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் தெருக்களில் குப்பைகளை அகற்ற வேண்டும் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கே.ரஜினியிடம் மனு அளிக்கப்பட்டது
இந்த மனு வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.ராகவன் உடனடியாக பரீசலனை செய்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாயினை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றியும் சிமெண்ட் சாலை அமைத்தும் உள்ளிட்ட கிராம மக்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அதன் புகைப்படம் மற்றும் முழு அறிக்கையை நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி ஏ கே கே ரஜினியிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெ. ராகவன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். முனிராஜ் பணி மேற்பார்வையாளர் எல்.செந்தில்ராஜா ஊராட்சி செயலர் மீனா ஆகியோர் வழங்கினார்கள்.