சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நடந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் களில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா வரு கிற ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவ உள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவையும், கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாவில் கள்ளழகர் மதுரை புறப்பாடு. எதிர்சேவை, வைகையாற்றில் எழுந்தருளல் போன்ற திருவிழாக்கள் முத்தாய்ப்பானவை. இந்த விழா வெகுவிமரிசையாக 15 நாட் களுக்கு மேல் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.


கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா அழகர் கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மூலவர் சன்னதி முன்பாக நடந்தது. மேளதாளம் முழங்க, வேத 7 மந்திரங்களுடன், ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி ஈ கள் தொடங்கின. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், நூபுர கங்கை தீர்த்த அபிஷேகத்துடன் தீபாராதனைகளும் நடந்தன.


ஆயிரம் பொன் சப்பரத்திற்கு, மூங்கில் பிரிக்கும் நிகழ்ச்சி
சிறப்பாக நடத்தி கொடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள். கள்ளழகர் கோவில் பட்டர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

இதில் மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் சுரேஷ், கள்ளழகர் கோவில்
துணை ஆணையர் யக்ஞ நாராயணன், கூடலழகர் கோவில் உதவி ஆணையர் பிரதீபா, மற்றும் கண்காணி பாளர்கள், உதவி பொறியாளர்கள், பேஷ்கார்கள், மக்கள் தொடர்பு அலுவலர், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *