இந்திய நாட்டின் 77 -ஆவது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு காவல்துறை காவாத்து வளாக மைதானத்தில் சரியாக காலை 8.05 மணிக்கு இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, நகராட்சி காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், 2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.