எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் திருவாரூரில் வரும் மே 5 தேதி 43 வது வணிகர் தினம் மாநில மாநாடு விழிப்புணர்வு எழுச்சி மாநாடாக நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் தீவிரமாக நடத்தி வருகிறோம். தேர்தல் அதிகாரிகள் சோதை என்ற பெயரில் சாதாரண வியாபாரிகளை விரட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது நாங்கள் அரசியல் கட்சியினரோ அல்லது ஓட்டு பணம் கொடுப்பவர்களோ அல்ல வியாபாரத்திற்காக பணம் கொண்டு செல்லும் எங்களை வழிமறித்து வீடியோ எடுப்பது போன்ற செயல்கள் மிகுந்த மன உளைச்சலை தருகிறது.
மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் வணிகர்களை அழைத்து உரிய நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் இல்லை எனில் வணிகர்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழி இல்லை. மத்திய அரசு காஸ் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படைகள் தீர்க்க வேண்டும் அப்போதுதான் ஹோட்டல் தொழில் பாதிக்காமல் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க முடியும். ஆன்லைன் வர்த்தகத்தால் எங்களது வியாபாரம் 35 சதவிகிதம் பறிபோய்விட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆதிக்கத்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் சிறு வணிகர்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வணிகர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில் எங்களது கோரிக்கைகளை ஏற்று எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கு ஒரு கோடி வணிகர்கள் வாக்கு அளிக்கப்படும் ஆன்லைன் வர்த்தகப் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலிடம் முறையிட்டுள்ளோம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் இது குறித்து பேசுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கடைகளில் பெயர் பலகையில் முதல் வரிசையில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் இரண்டாவது ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் இருக்கலாம் இது தொடர்பாக சென்னை ஈரோடு உள்பட பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
புத்தூர் உள்ளிட்ட இடங்களில் வணிகர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது கஞ்சா போதை ஆசாமிகளிடமிருந்து வணிகர்களை காக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடன் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் இருந்தனர்.
பேட்டி: விக்ரகிமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர்.சீர்காழி.