C K RAJAN Cuddalore District Reporter
9488471235..
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்
தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, 107 பயனாளிகளுக்கு ரூ.6,29,90,916 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வழங்கினார்.
அதனை அடுத்து ஆட்சியர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.தொடர்ந்து 107 பயனாளிகளுக்கு ரூ.6,29,90,916 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.10,18,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,636 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்தார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.5,40,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தொழில் வணிகத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.14,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ.42,40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,69,861 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.15,75,969 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என ஆகமொத்தம் 107 பயனாளிகளுக்கு ரூ.6,29,90,916 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண் பொறியியல் துறை, பேரூராட்சிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, பள்ளி கல்வித்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 105 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 117 சிறந்த காவலர்களுக்கு முதலமைச்சர் விருது மற்றும் பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
மேலும் ஸ்ரீவரதம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேணுகோபாலபுரம், இமாகுலேட் மகளிர் கல்லூரி கடலூர்,புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னகங்கனாங்குப்பம், சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, அரசு உயர்நிலைப்பள்ளி,கடலூர் முதுநகர் ஆகிய பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன்,மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.