நாமக்கல் ஜனவரி 26.
நாமக்கல் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 77-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பை, மாவட்டக் காவல் கண்காணிப்பளர் விமலா உடன், திறந்தவெளி ஜீப்பில் சென்று பார்வையிட்டு, ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில், வண்ண வண்ண பலூன்களையும் ஆட்சியர் வானில் பறக்க விட்டார்.
மேலும், காவல்துறையில் 10 ஆண்டுகளாக அப்பழுக்கற்ற வகையில் பணிபுரிந்த 53 காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கங்களையும், 343 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 17 பயனாளிகளுக்கு ₹. 65 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.