தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் செயற்குழு கூட்டம் தாராபுரம் ஐஸ்வர்யா மஹாலில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் நகராட்சி நான்காவது மண்டல குழுத் தலைவர் இல பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் . . சக்கரபாணி துணைப் பொதுச் செயலாளர் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு. செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளுக்குச் சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி கண்காணிப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அடுத்த முப்பது நாட்களுக்கு செய்யக்கூடிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தொகுதி கண்காணிப்பாளர் , நகர ஒன்றிய பேரூர்க் செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டனர்.