, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம், தேவர்மலை பஞ்சாயத்தை சார்ந்த வீராச்சாமி உட்பட திமுகவினர் பத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையேற்று, சட்டமன்றத் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட செயலாளருமான காவேரி மோகன்ராஜ் முன்னிலையில், ஒன்றிய தலைவர் ஶ்ரீ விகான் ரமேஷ் தலைமையில் ரங்கராஜ் ( Ex.Army ) ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சதீஸ்குமார், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மாரிமுத்து மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.