தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்.கரூர் மாவட்டத்தில் செய்தி சேகரிப்பின் போது நியூஸ் தமிழ் ஊடகத்தின் திருச்சி மாவட்ட தலைமைச் செய்தியாளர் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் அண்ணா சிலை – சர்ச் ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஊடக நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கே. கருணாநிதி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர் சங்கச் செயலாளர் காஜாமைதீன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் தங்கவேல், கௌரவ தலைவர் மன்சூர் அலி, சாம்ராட் முரளி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம்,விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து,
பாஜக மாநில இளைஞரணி செயலாளர் யோகேஸ்வரன்,இந்து மக்கள் கட்சி செல்வராணி,பகுஜன் சமாதி வாத கட்சி அலாவுதீன்,அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் அபுதாஹிர்,திராவிட கழக சக்திவேல்,தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் ஒண்டிவீரன்,ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் காளிமுத்து,மாவட்டத் தலைவர் பூக்கடை ராமர்,மூலனூர் ஒன்றிய செயலாளர் ஐயனார்,
எஸ்டிபிஐ கட்சி தாராபுரம் தொகுதி தலைவர் மன்சூர் அலி, இஸ்மாயில் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.
ஊடக நண்பர்கள் கண்டன உரை.
இதில்,
நியூஸ் தமிழ் தாராபுரம் செய்தியாளர் காஜா மைதீன்,
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பூபதி,
அவிநாசி செய்தியாளர் ஞானசேகர்,
காங்கேயம் செய்தியாளர் நித்தியானந்தன்,
பல்லடம் செய்தியாளர் சரவணகுமார் தாராபுரம் செய்தியாளர் பிரபு. உள்ளிட்டோர் கலந்து கொண்டு,
“செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் குரலை அடக்கும் செயல்” என கடுமையாகக் கண்டித்தனர்.
“தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்,
பாதிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உடனடி அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
செய்தியாளர்களை தாக்கிய திமுக குண்டர்களை கைது செய்ய வேண்டும்
சம்பந்தப்பட்ட கல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்
என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தாராபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம். ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.