தேனியில் இது நம்ம ஆட்டம் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர்
தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை யின் சார்பில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆளு 2026 மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்
இதன்படி மாற்றுத்திறனாளிக்களுக்கான ஓவிய போட்டிகள் கோலப் போட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளது இந்த போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆண்கள பிரிவு கை கால் பாதிக்கப்பட்டோர் மன நலம் குன்றிய செவித்திறன் குறைபாடு உடையோர் 100 மீட்டர் ஓட்டமும் பார்வை குறைபாடு உடையோர் குண்டு எறிதல் பெண்கள் பிரிவு கை கால் பாதிக்கப்பட்டோர் மன நலம் குன்றிய செவித்திறன் குறைபாடு உடையோர் 100 மீட்டர் ஓட்டமும் பார்வை குறைபாடு உடையோர் குண்டு எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 6000 மும் இரண்டாம் பரிசாக 4000 மும் மூன்றாம் பரிசாக 2000 உள் பட விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் அரசு அலுவலர்கள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்