மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் வாலாம்பிகை உடனுறை வன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உள்ள முருகன் வள்ளி தெய்வானை சன்னதியில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக ஓலை கொண்ட அய்யனார் கோவிலில் இருந்து பெண்கள் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் காவடிகளை சுமந்து மேளதாளம் வழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் வன்னிஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் மகா தீபாரதனை கண்டிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *