தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு.

தைப்பூசத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம். சுமார் 5.மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.இலவச தரிசனத்திற்காக 2.கிமீ தூரத்திற்கு நீளும் நீண்ட வரிசை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று தைப்பூச விழா அரசு விடுமுறை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் என்பது கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது,சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளனர்.

பொது தரிசனம்,50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது . இலவச தரிசனத்திற்கு சுமார் 2.கிமீ தூரம் வரையில் கோவில் குளத்தை சுற்றிலும் வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார்5.மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், குழந்தை பாக்கியம், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும்,செங்கற்களை அடுக்கி வைத்தும், தொட்டில் கட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அரோகரா,அரோகரா என பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்து சென்றனர்.

(மேலும் பக்தர்கள் தெரிவிக்கையில் இத்தகை பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் குடி தண்ணீர்,கழிவறை, இலவச கைவறையில் சுத்தம் கூட செய்ய முடியாத நிலைமை உள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதாகவும்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வெயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதாகவும், போதிய அளவிற்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் பக்தர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
எனவே அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு முருகனுக்கு உகந்த நாட்களிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும் என்று குற்றச்சாட்டு முன் வைத்தனர்.

செய்தியாளர்
S.சீனிவாசன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *