புதுப்பட்டினம் கிராமத்தில் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா


புதுப்பட்டினம்,
பா.ம.கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டவர் காடுவெட்டி குரு. இவரது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் பா.ம.க திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ப தினேஷ் குகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜயகுமார், யூனுஸ், சரவணன் மணி எல்லப்பன். இராதாகிருட்டினன், மகேஷ் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கணபதி, திருக்கழுக்குன்றம் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் மாநில அமைப்புச் செயலாளருமான பி.வி. கே. வாசு, மாவட்ட செயலாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு குரு திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அனைத்து நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *