பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலையில் தைப்பூசத்தையோட்டி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் KS. மூர்த்தி, பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள, கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது வருடா வருடம் தைப்பூச நிகழ்ச்சி திருத்தேரோட்டம், பால் காவடி இளநீர் காவடி மயில் காவடி என திருவிழா நடைபெற்று வருவது வழக்கம் இந்தாண்டும் அதுபோல தைப்பூசத் தேர் திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனவரி 26 ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம், குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று (பிப்ரவரி 1) தை பூசம் திருநாளையொட்டி அதிகாலை 5 மணிக்கு உற்சவர் பாலசுப்பிரமணியசுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும், மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடை பெற்றது
இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் KS.மூர்த்தி பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ராமலிங்கம், கபிலர்மலை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி மற்றும் நாமக்கல்,கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷசத்துடன் திருத்தேர் மலையை சுற்றி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை 02 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், சத்தாபரணம், சிம்மம், நடராஜர் தரிசனம், ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, சுவாமி மலைக்கு எழுந்தருளல், விடையாற்றி உற்சவம் மற்றும் சர்ப்ப வாகன காட்சியும் நடைபெறுகிறது. கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.