பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை..
நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அனீஸ்பாத்திமா பாபநாசத்தில் பேட்டி..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அனீஸ் பாத்திமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
பாபநாசம் தொகுதியை பொறுத்தவரை தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலை கல்லூரி கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. மாணவர்கள் கல்லூரி படிப்பு பயில வேண்டுமென நினைத்தால் தனியார் கல்லூரியில் பயில வேண்டும் அல்லது இந்த தொகுதியை கடந்து, தஞ்சை கும்பகோணம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
மேலும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் எனவும் தனது வாக்குறுதியில் கூறினார். இதுவரை அமைக்கப்பட்டதா. அவர் சொன்ன எந்த வாக்குறுதிகளும் இந்தப் பகுதியில் நிறைவேற்றபட வில்லை என்பது தான் இங்குள்ள பிரச்சனையாக உள்ளது..
பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது என்றால் அது ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்ததில்லை இனிமேலும் இருக்காது என்பதுதான் உண்மை. இவர்கள் வேலை எளிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அம்பானி அதானி போன்ற பெரும் பணக்கார்களுக்கு கொடுப்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்..